உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தை மட்டுமே பயன்படுத்தி கேள்விக்கு பதிலளியுங்கள்.…
- User
உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தை மட்டுமே பயன்படுத்தி கேள்விக்கு பதிலளியுங்கள். கேள்வியை சரியாகப் புரிந்து கொண்டு, தமிழில் மட்டுமே பதில் அளிக்கவும். ஆவணத்தில் தவறுகள் இருந்தால், சரியான தமிழ் பதிலை வழங்குங்கள்.
தலைப்பு: ஜெயகாந்தனின் சிறுகதைகள் - தொகுப்பு - 1
மூட்டை முடிச்சுகளுடன் பறந்து பறந்து ஓடுகிறவர்கள், கூடைச்சுமைகளுடன் ஒய்யாரமாய் கைவீசி நடக்கிறவர்கள், தோளில் உட்கார்ந்து கொண்டு கரும்பு கடிக்கும் பிள்ளைச் சுமையுடன் துள்ளி நடப்பவர்கள், கட்டை வண்டிகளில் அழிகம்பைப் பிடித்துக்கொண்டு நகத்தை கடித்தவாறு சிரித்துச் செல்லும் கிராமத்து அழகிகள், தெரு ஓரங்களில் குந்தி இருந்து வியாபாரம் செய்பவர்கள், கூடியிருந்து பேசி மகிழ்பவர்கள், வியாபராம் செய்தவாறு வேடிக்கை பேசுபவர்கள், விலை கூவியவாறு பாட்டுப் பாடுபவர்கள். வேடிக்கை பார்த்தவாறு வழிவட்டம் போடுபவர்கள், கேலி பேசிவாறு 'கேளிக்கை'க்கு ஆயத்தமாகிறவர்கள்--- மனிதர்கள் திருநாள்போல் மகிழ்ந்திருந்தனர். வாழ்வின் உயிர்ப்பு எத்தனையோ கோலத்தில் வளைய வந்துகொண்டிருந்தது அங்கே. "தம்பி...வீணா மனசைப் போட்டுக் கொளப்பிக்காதே' மூணு மணிக்கு எவனாவது செதம்பரத்துக்கு எலைக்கட்டு ஏத்திக்கிட்டுப் போவான்...அப்போ உன்னையும் எளுப்பி வண்டியிலே ஏத்திவுடறேன்.... நீ போயிடலாம்...ராவிக்கு எங்கவூட்லே சாப்பிட்டுட்டுப் படுத்துக்க... நானும் ஒன் வயசிலே இப்படி ஓடியிருக்கேன்....அப்புறம்தான் தெரியும் அந்த சுகம்'...." என்று சொல்லிவிட்டுக் கிழவர் பழைய நினைவுகளில் லயித்துக் தனக்குள் சிரித்துக்கொண்டார்..... ---அவன் முகத்திலும் வாழ்வின் சுவைபோல் சிரிப்புப் பூத்தது' 'நல்லாத்தான் இருக்கு...' என்று வாய்விட்டு முனகிக் கொள்ளும்போதே மனசில் '--என்ன நல்லாருக்கு?' என்ற கேள்வியும் பிறந்தது. "அடெ பைத்தியக்காரப் புள்ளே....அந்த மலைக்கி இந்தச் சரீரத்தோட போவ முடியுமா'லே.... காரைக்காலம்மையாரே தலையாலே நடந்தில்லே போனாவ....நாமெல்லாம் செத்தப்புறம்தான் போவமுடியும்...நீ பசலை...இன்னம் எவ்வளவோ அனுபவிக்கக் கெடக்கு...படிச்சி, சம்பாதிச்சு, கலியாணம் காச்சின்னு கட்டிக்கிட்டு, புள்ளெக் குட்டியெல்லாம் பெத்து, என்னெ மாதிரி ஆனப்புறம் இந்தப் புத்தி வந்தா சரிதான்....இப்பவேவா?....இது என்னடா, கிறுக்குத்தனமால்லே இருக்கு....எனக்குக்கூட இல்லே அந்த மாதிரிப் புத்தி வரமாட்டேங்குது..." என்று சொல்லிக்கொண்டிருந்த கிழவர் ஏதோ பழைய நிகழ்ச்சியில் லயித்தவர்போலச் சிரித்துக் கொண்டார். கீழ் வௌியிட உள்ளோம்.
- யுக சந்தி மின்பதிப்பு 2. இல்லாதது எதுமின்பதிப்பு 3. இரண்டு குழந்தைகள்மின்பதிப்பு 4. நான் இருக்கிறேன்மின்பதிப்பு 5. பொம்மைமின்பதிப்பு 6. தேவன் வருவாரா?மின்பதிப்பு 7. துறவுமின்பதிப்பு 8. பூ உதிரும்மின்பதிப்பு 9. குறைப் பிறவிமின்பதிப்பு 10. யந்திரம்மின்பதிப்பு
- யுக சந்தி - ஜெயகாந்தன்
கௌரிப் பாட்டி பொறுமையாய் வெகு நேரம் பஸ்ஸிற்குள் நின்றிருந்தாள். எல்லோரும் இறங்கிய பின், தனது காக்கி நிறப் பையின் கனத்தை இடுப்பில் ஏற்றிக் கொண்டு கடைசியாக வந்தாள். "நான் சாவதற்கு அஞ்சவில்லை. நான் முக்கியமான சில கண்டுபிடிப்புகளைக் குறித்துக் கொண்டிருக்கிறேன். எனது குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு பல சாதனைகளைப் புரியலாம்; அவற்றை முடித்தபின் நான் சாகத் தயார்" என்று அவசர வேகமாய் ஓடித் தன் இருக்கையில் அமர்ந்து, 'போனை' எடுத்துத் தலையில் மாட்டிக் கொண்டு அந்தக் கருவிகளை இயக்க ஆரம்பித்தான். தேவன் வருவானா (1961), சுமை தாங்கி (1962), மாலை மயக்கம் (1962), யுகசந்தி (1963), உண்மை சுடும் (1964), புதிய வார்ப்புகள் (1965), சுய தரிசனம் (1967), இறந்த காலங்கள் (1969), குருபீடம் (1970), அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் (1972), சர்க்கரம் நிற்பதில்லை (1973), பபுகை நடுவினிலே (1990), ....... . இவற்றிலிருந்து ஒரு சில சிறுகதைகளை மதுரை திட்டத்தின் கீழ் வௌியிட உள்ளோம். --வாழ்வைக் கடக்கப் பறந்தோடும் அவதியா, என்ன?...அவளது இயல்பே அப்படித்தான்' --வாழ்வு நடக்க நடக்க மாளாதது. ஏனென்றால் தனிப்பட்ட ஒருவருடையதா வாழ்க்கை? அது மனித சமூகத்தின் ஆதி அந்தமற்ற சரிதை' அதைப்பற்றியெல்லாம் அவள் சிந்திப்பதில்லை...ஏன், நேரமில்லையா? நேரம் உள்ளவர்களெல்லாம் சிந்திக்க முடியுமா? சிந்தனை' அதன் முழு அர்த்தத்தோடும் சொல்கிறேன்...அது விளக்க முடியாதது...சிந்தனை ஒரு வரப் பிரசாதம்' சிந்தனையின் ஆதியும் அந்தமும்...சிந்திக்கச் சிந்திக்க வியப்பாகத்தான் இருக்கிறது' "நான் மீண்டும் மீண்டும் இதைத்தான் சொல்வேன். நீ போய் உனக்கு தெரிந்த உனது பாஷையில் பேசிக் கொண்டிரு. அல்லது அறிவின் பாஷையை நம்பாது அர்த்தமற்ற முணுமுணுப்புடன் உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 'ஆஸ்திகர்'களிடம் போய்ப் பேசு. அல்லது உன்னை மறுத்து உன்னைப் பற்றியே தர்க்கித்துக் கொண்டிருக்கும் 'நாஸ்திகர்'களிடம் போய்ப் பேசு---இருவரும் நம்பிவிடுவார்கள். அவர்களின் தீராத விவகாரமாவது தீர்ந்து தொலையும் ஆம்; அகண்டத்திலுள்ள கோளங்கள் ஒன்றை ஒன்று ஈர்த்து--அந்த ஆகர்ஷணத்தில் ஸ்திதி பெற்றிருப்பது போலத்தான், இந்த ஆத்திகர்களும் நாத்திகர்களும் ஒருவரின் தர்க்கத்தில் மற்றொருவர் இழுத்துக் கொண்டும், பறித்துக் கொண்டும் இருப்பதால் இருக்கை கொண்டுள்ளனர். என் காரியம் அதுவல்ல, அறிவும் கரமும்தான் மனிதருக்குத் தேவை. அவற்றின் காரியங்கள் முற்றிலும் முடிந்த பிறகு, ஆத்மாவைப் பற்றி யோசிக்கலாம். நீ போ' " "யார் நீ?...." என்று முகட்டை நோக்கி நிமிர்ந்த தலையைத் தாழ்த்தாமல், இமைகளையும் திறக்காமல் கேட்டான். "நான்தான் பரமாத்மா' " "ஓ' வழி தவறி வந்து விட்டாய்....இந்த உன் சுய அறிமுகம், அதோ பக்கத்திலிருக்கிறதே மாதா கோயில், அல்லது தூரத்தில் இருக்கிறதே ஒரு மசூதி, அல்லது உன்னையே கல்லாக்கி சிறை வைத்திருக்கிறதே கலைக்கோயில் ஒன்று, அங்கே ஔித்தால் அவர்கள் சாபல்ய முறுவார்கள்.....போ, என் காரியத்துக்குக் குந்தகம் செய்யாதே' " "ஏன் விஞ்ஞானியான உன்னிடத்தில் வேலை இல்லை என்கிறாயா?" "நான்தான் சொல்றேனே, எனக்குக் காலில்லாம மத்தவங்களுக்குத் தான் பாரமா இருக்கேனே' எங்கம்மா வைத்தியனுக்குன்னு தம்பியைப் பணம் கேக்கறப்போ அவங்க ரெண்டு பேருக்கும் என்னாலே எவ்வளவு சண்டை' எவ்வளவு வருத்தம்' " என்று நொண்டி சொல்ல, குறுக்கிட்ட வியாதிக்காரன், "ஆமாய்யா, நீ சதாநேரமும் உங்கம்மா தோளைப் புடிச்சுத் தொங்கிக்கிட்டே இருந்தா அப்படித்தான் சண்டை வரும். காலு இல்லாட்டிப்போனா என்னாய்யா? கையாலே இந்த உலகத்தையே வளைக்கலாமே' வாழ்றத்துக்குக் காலும் கையும் வேணாமய்யா. நல்ல மனசு வேணும், அறிவு வேணும். மனுசனோட அறிவு யானையைக் காட்டிலும் சிங்கத்தை காட்டிலும் வலுவானது. இல்லேங்கறதுக்காகச் செத்து இருந்தா மனுச சாதியே பூண்டத்துப்போயிருக்கும். காலு இல்லாட்டி அது இல்லாத் கொறையை மாத்திக்கிட்டு எப்படி இருக்கிறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்னா, காலு இருக்கிறங்களைக்காட்டிலும் நீ வேகமா ஓடிடமாட்டியா? 'அது' அவனது பிரசங்கத்தைக் கேட்டு, அரை மனத்துடன் சிரித்துவிட்டு, பின்னர் கேட்டது. "அறிவின் அடிமையே...உன் சர்வ வல்லமை பொருந்திய அறிவு, உனது ஊன் பொதிந்த உடம்புக்கு உட்பட்டதுதானே?" "ஆம்' " "சரி, உன் உடம்புக்கு ஏற்படும் நோய், மூப்பு, மரணம் என்ற விதியின்படி அதுவும் செத்துவிடுகிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும்; அந்த அறிவால் இந்த விபத்துகளைத் தடுத்துவிட முடியும் என்றுகூட நீ நம்புகிறாயா?" "இல்லை, 'நான்' எனபது முன்னு மற்ற பின்னு மற்ற இடைநிலை என்று எண்ணி, தனக்கு இருபுறமும் தொடர்ந்து வந்ததும் வருவதுமான சங்கிலிகளைத் துண்டித்துக்கொண்டு, தன்மயமான 'நான்' மட்டுமே ஸ்திரப்படுத்த முயன்று உன்னைத் தொழுதுகொண்டு இருக்கும் மூடாத்மாக்களுக்குத்தான் அவ்வித பிரமிப்பு உண்டாவது சாத்தியம். ஆனால் நான், இந்த நூற்றாண்டில் வாழும் 'நானா'கிய எனக்கு வெகு சாதாரணமாய் இருக்கும் எத்தனையோ விஷயங்கள், எனக்கு முந்தைய நூற்றாண்டுகளில் வாழ்ந்த 'நான்'களுக்குப் பிரமிப்பாய்த் தோன்றி, அந்த மயக்கத்தில் உன் காலடியில் அவர்கள் வீழ்ந்தனர் என்று அறிந்தவன். ஆனால் இன்று எனக்குப் புரியாத புதிர்கள் எத்தனை கோடி இருப்பினும் அவற்றுக்காக இந்த வினாடி நான் பிரமிப்புற்ற போதிலும் இவை யாவும் தௌிவடையும், எனக்குப் பின்னால் வரும் 'நான்'களுக்கு ரொம்ப அற்பமான உண்மைகளாய் விளங்கும் என்று நம்புகிறேன். அதனால்தான் எவ்வித மயக்கத்துக்கும் ஆளாகாமல், உன் காலில் விழாமல் என் காரியத்தை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதற்கெல்லாம் அடிப்படை எங்கள் அறிவுப் புலன். ஒரு நீண்ட முடிவற்ற சங்கிலியின் ஒரு கண்ணியாக விளங்கும் நான், எனது கருமத்தை நிறைவேற்றுவதைத் தவிர மற்ற எதைப்பற்றிய பிரமைகளையும் லட்சியப்படுத்த மறுக்கிறேன். எனக்குப் பின்னால் வரும் 'நான்'என்ற கண்ணி ஒவ்வொன்றும் அவ்விதமே செயல்படும். இந்த 'நானென்னும்' கண்ணிகளில் ஏதோ ஒன்று, வரப்போகும் ஏதோ ஒரு காலத்தில் ஆற்ற வேண்டிய காரியங்கள் அனைத்தையும் முடித்து. பின், வழி தெரியாமல் திகைத்து நின்றுவிடுமானால், அப்போது நீ எதிர்ப்படுவாயானால், அந்த 'நான்' ஒருவேளை உன் காலில் விழலாம். ஆனால் அவ்விதம் நிகழப் போவதில்லை. ஏனெனில் அறிவு என்ற எமது மகத்தான புலன், எந்த அமைப்பிலும் சிக்கி 'இவ்வளவே' என்ற வரையறையில் நிற்கத் தகுந்தது அல்ல. இந்தப் பிரபஞ்சம் எவ்வளவு விரிந்ததோ, அத்தகைய விரிவு மிகுந்தது அறிவு. ஆகையினால் அந்த 'நான்' என்ற அறிவின் முன் 'நீ' என்ற பிரமைதான் மண்டியிட வேண்டும்---ஆம்; மானுடம் வெல்லும். பிரமைகள் நீங்கும்; அல்லது விளக்கப்படும்." "ஏ' அறிவாத்மாவே.....உன் அறிவின் வல்லமையும் கரங்களின் நுண்மையும் ஒருபுறம் இருக்கட்டும். நீ துருவித் துருவி ஆராய்வதாகவும் கண்டுபிடிப்பதாகவும் பெருமையடித்துக் கொள்கிறாயே, அந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அவற்றின் நியதிக்குட்பட்ட போக்கையும் காண உன் மனம் வியப்படைய வில்லையா? அந்த வியப்புக்கு மூல வித்தான அர்த்தமுள்ள ஓர் வஸ்துவைப் பற்றி எண்ணிப் பார்க்கையில், உனக்கொரு பிரமிப்பு விளையவில்லையா? அந்த பிரமிப்பால் உன் அறிவும் கரமும் குவிந்து அடக்கமுறவில்லையா? அந்தச் சக்தியின்முன் தாளத்திற்குட்பட்ட சங்கீதம்போல், பிரபஞ்ச இயக்கத்தையே ஒரு நியதிக்குட்படுத்தி, இணைத்து இயக்கும் அந்தப்பேராற்றலின் முன் நீ மிகவும் அற்பம் என்று உனது கண்டுபிடிப்பே உணர்த்தவில்லையா?" "ஓ' தொடர் கதையா வந்துதே....அந்தக் கதை தானா அது?... பேரைப் பார்த்தேன்..." என்று ஒரு பத்திரிக்கையின் பெயர், ஓர் எழுத்தாளரின் பெயர் முதலியவற்றைக் குறிப்பாகக் கேட்டாள் பாட்டி. "இதுக்காகப் போய் ஏன் கொழந்தைகளை சனியன்னு திட்டறாய்?... நோக்கும் எனக்கும் சினிமான்னா என்னன்னே தெரியாது.... இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு சினிமாவைத் தவிர வேற ஒண்ணும் தெரியாது. நம்ம கொழந்தைகள் எவ்வளவோ பரவாயில்லைன்னு நெனச்சிக்கோ..." என்று மகனுக்குப் புத்தி சொல்லிவிட்டு, "கவர்லே என்ன சொல்லு-- அவளைக் கேட்டப்போ, 'அப்பா சொல்லுவா' ன்னு பூடகமா குடுத்து அனுப்பிச்சாள்" என விளக்கினாள் பாட்டி.
- Assistant
இந்த உள்ளடக்கம் ஜெயகாந்தனின் சிறுகதைகள் மற்றும் அவரது படைப்புகளைப் பற்றிய தொகுப்பு ஆகும். இதில் பல்வேறு கதாபாத்திரங்களின் நிகழ்வுகள், உரையாடல்கள் மற்றும் அவர்களின் ஆன்மிக சிந்தனைகள் அற்ற வினாக்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, அவிழ்க்கப்பட்ட வாழ்க்கை, மனிதர்களின் அனுபவங்கள் மற்றும் அறிவின் மதிப்பு பற்றி கருத்துக்களை அலசுகிறது. இது ஜெயகாந்தனின் படைப்புத் திறனை மற்றும் அவரது கதையின் மொழியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.